மேஷ ராசி அன்பர்களே …! இன்று எல்லா காரியங்களும் அனுகூலமாக முடியும். அரசு ஆதரவு முக்கிய நபர்களின் உதவி புதிய வேலைவாய்ப்பு சாஸ்திர மந்திர வித்தைகளில் தேர்ச்சி போன்றவை அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்க தன்னம்பிக்கை கூடும். குடும்ப பிரச்சனைகள் சரியாகும். எதிலும் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ஏதேனும் மனக்கஷ்டம் அவ்வப்போது இருக்கும். வீண் செலவைக் கட்டுப்படுத்திவிடுங்கள். உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம்.
மனதை எப்போதும் தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள். மற்றவரிடம் உரையாடும் போது நிதானம் என்பது எப்பொழுதுமே வேண்டும். அதே போல உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள். முயற்சிகள் ஓரளவு சாதகமான பலனையே கொடுக்கும். புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். அதேபோல தொழிலை விரிவுபடுத்த கூடிய எண்ணங்கள் மேலோங்கும். பொறுமை என்பது ரொம்ப முக்கியம்.
இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனைகள் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுப்பதை எப்போதுமே வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.