Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கியவர்களா நீங்கள்….? “கவலை வேண்டாம்” ரிசர்வ் வங்கி செம அறிவிப்பு….!!

வங்கியில் கடன் பெற்றவர்களுக்காக சில  சிறப்பு சலுகையை ஆர்பிஐ தற்போது அறிவித்துள்ளது. 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சமயத்தில்,

ரிசர்வ் வங்கி தற்போது நெருக்கடியில் தவிப்பவர்களுக்கு தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடன் புதுப்பிக்கும் திட்டத்தை தற்போது RBI அறிவித்துள்ளது. இதன்படி, தனிநபர்கள், நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடனை புதுப்பித்துக்கொள்ளலாம் மற்றும் திவால் & நொடிப்பு நிலையை அறிவிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதத்துக்கு முன்பு கடனை செலுத்த தவறியவர்ளுக்கு மட்டும் இந்த கடன் கொடுக்கும் திட்டம் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |