Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு : பாதிக்கு பாதி மாணவர்களுடன்….. 2 ஷிப்ட் முறை…. மத்திய அரசு அறிவுரை…!!

இந்தியாவில் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் அதற்கான அறிவுரைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அந்த வகையில், தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளும் , அமைச்சரும் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே  பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு பள்ளிகள் திறக்கவிருக்கும் பட்சத்தில், அதற்கான சில அறிவுரைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசிக்க படவில்லை.

உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரும் பட்சத்தில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்படும். காலை 8 மணியிலிருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட். அதன் பின் மாலை 3 மணி வரை இரண்டாவது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு சிப்டிலும்  33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Categories

Tech |