Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரை கேட்டு செலவு பண்ண….? பெற்ற தாயை கொன்று புதைத்த கொடூர மகன்கள் கைது….!!

ஈரோடு அருகே பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு பகுதியில் வசித்து வருபவர் சரோஜா. கணவனை இழந்த இவர் தனது மகன்களான விக்னேஸ்வரன் மற்றும் அருண் குமார் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களுக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி குடித்துவிட்டு தனது தாயாருடன் சண்டை இடுவது வழக்கம். அந்த வகையில், நேற்றைய தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த இருவரும் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 2000 காணவில்லை என தேடியுள்ளனர்.

இதுகுறித்து தாயாரிடமும் கேட்கையில், வீட்டுச் செலவுக்காக எடுத்து செலவழித்ததாக  அவர் தெரிவிக்க, ஆத்திரமடைந்த மக்கள் யாரை கேட்டு பணத்தை செலவழித்தாய்  என்று கேட்டவாறு, அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரது தலையில் பலமாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சரோஜா வலியில் துடித்து அலர, அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்க்கையில் அவர் மயங்கி கிடந்தார்.  இதையடுத்து தாயை கம்பியால் தாக்கிய அவரது மகன்ளே  அவரைக் தூக்கி கொண்டு  தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்க  உடனடியாக தாயாரை வீட்டருகே உள்ள  மயானத்தில் புதைத்துவிட்டனர். பின் இது குறித்து காவல் நிலையத்தில் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வருவாய்துறை  அதிகாரி  முன்பு இறந்தவர் சரோஜாவின்  உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்படவே, குற்றவாளிகளான விக்னேஸ்வரன் அருண் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அவர்கள் இருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ள கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Categories

Tech |