Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இ-பாஸ் விவகாரம் : ரூ1,500 மட்டும்போதும்….. இந்தியாவின் எந்த மூளைக்கும் செல்லலாம்….. 2 பேர் கைது….!!

வேலூரில் போலி இ பாஸ் வழங்கியது தொடர்பாக இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் இதனுடைய  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இ  பாஸ் நடைமுறை நிலுவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ பாஸ் பெற விரும்புபவர்களுக்கு சரியான காரணங்களும் ஆவணங்களும் இல்லை என்றால் அவர்களுக்கு இ பாஸ் வழங்கப்படமாட்டாது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பலர் கொள்ளை இலாபம் ஈட்ட நினைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் வாட்ஸ்அப் குரூப்களில் ரூபாய் 1,500 கொடுத்தால் போதும், இந்தியாவின் எந்த பகுதிக்கு  வேண்டுமானாலும், செல்வதற்கான இ பாஸ் எங்களிடம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட விளம்பரங்கள் வைரலாக பரவி வந்தன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட,  அவர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டாலின், வடிவேல் ஆகியோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இதுவரை பொதுமக்களுக்கு இ பாஸ்களை வினியோகம் செய்து ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் எவ்வளவு பணம்  மோசடி செய்துள்ளார்கள் என்பது  குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்த விரிவான விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Categories

Tech |