சிம்ம ராசி அன்பர்களே…! குடும்பத்தாரின் அற்ப ஆசைகளால் செலவுகள் அதிகமாக இருக்கும். பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு வழி வகுப்பார்கள். என்னதான் நீங்கள் உழைத்தாலும் ஆதாயம் குறையும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகத்தான் செயல்பட வேண்டும். யாரிடமும் தயவுசெய்து கடுமை காட்டாதீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கையில் வருவதில் சிக்கல்கள் இருக்கும்.
சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். உச்சத்தில் இருப்பவர்கள் பணி நிமிர்த்தமாக அலைய வேண்டியிருக்கும். எதிலும் பொறுமை என்பது கண்டிப்பாக வேண்டும். காதலர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். புதிதாக கடன்கள் ஏதும் என்று வாங்க வேண்டாம்.
அதேபோல் புதிய முயற்சிகளும் எதுவும் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.