Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…எதிர்ப்புகள் விலகும்… வெற்றி உண்டாகும்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் விருத்தி ஏற்படும். பெயரும் புகழும் அதிகரிக்கும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். புத்தி சாதுர்யத்துடன் காரியங்கள் செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். வயிற்று பிரச்சனை கொஞ்சம் இருக்கும். கூடுமானவரை சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். எந்த ஒரு காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். இழுபறியான இருந்த காரியங்கள் கூட நல்ல படியாகத்தான் நடந்து முடியும். கவலை வேண்டாம். காதலர்களுக்கும் எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக செல்லும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

 

Categories

Tech |