சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் கொரோனா அச்சத்தால் தன்னை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான ஸ்டீபன் என்பவர் 15 வயது சிறுமி ஒருவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அச்சிறுமியிடம் 2 முறை தவறாக நடந்துள்ளார். அதேபோன்று 2019ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான தனி விமானம் ஒன்றில் சிறுமியை அழைத்துக் கொண்டு பயணித்த ஸ்டீபன் மீண்டும் அவரிடம் தவறாக நடந்துள்ளார். அதுமட்டுமின்றி சிறுமியை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் ஸ்டீபன் கைது செய்யப்பட்டு அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஏழு ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ஸ்டீபன் கொரோனா அச்சத்தினால் தன் மீது இரக்கப்பட்டு சிறையிலிருந்து விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார். அவரது மனுவில், “நான் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டுள்ளேன்.
கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு விடுவேனோ என்ற அச்சம் எழுந்துள்ளது. என் மீது இரக்கம் காட்டி என்னை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். பலமுறை நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பிறகு தற்போது கருணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மனு நிராகரிக்கப்பட்டால் 2025 ஆம் ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி வரை ஸ்டீபன் சிறையில் இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்.