Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…டென்ஷன் அதிகரிக்கும்…ஒத்துழைப்பு இருக்கும்….!

கும்ப ராசி அன்பர்களே …!   இன்று தேவையை அறிந்து செயல்படுபவர்கள். உங்கள் செயல்பாடுகள் சமூக விழிப்புணர்வு இருக்கும். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளில் டென்ஷன் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு கொஞ்சம் உண்டாகலாம்.

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்கமுடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவருடைய கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்து காரியங்களைச் செய்யுங்கள். எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டாதீர்கள். அதே போல் காதலர்கள் பொறுமை காக்க வேண்டும்.

நிதானமாக செயல்பட வேண்டும் வாக்கு வாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |