தனது மகளை நெருங்கிய முதலை அவள் மீது பாயும் முன் தந்தை காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ஆன்ட்ரூ என்பவர் தனது பிள்ளைகள் பிரண்ட்லைன் அவளது அண்ணன் மற்றும் அவ்விருவரையும் கவனித்துக்கொள்ளும் ராபின் வேண்டும் என்னும் இளம்பெண் ஆகிய மூவரும் ஏரியில் மீன் மற்றும் நண்டுகளை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அச்சமயம் அவர் கண்களுக்கு திடீரென முதலை ஒன்று தென்பட்டுள்ளது. அது விளையாடிக் கொண்டிருக்கும் தனது மகள் பிரண்ட்லைனை நோக்கி வருவதை பார்த்துள்ளார்.
தனது மகளிடம் இருந்து 10 அடி இடைவெளி இருக்கும் போது அந்த முதலை தண்ணீருக்குள் மூழ்கி உள்ளது. இதனை தொடர்ந்து முதலை மகள் மீது பாய்ந்து விடும் என அச்சம் அடைந்த ஆன்ட்ரூ சற்றும் தாமதிக்காமல் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் இளம் பெண்ணான ராபினை கதவு வழியாக வீட்டு தோட்டத்திற்குள் தள்ளிவிட்டு தனது மகளை தூக்கி வேலியைத் தாண்டி வீட்டிற்குள் வீசி எறிந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “முதலை தாக்குமா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது.
ஆனால் எனது மகள் விஷயத்தில் நான் எந்த ஒரு ரிஸ்க் எடுக்கவும் விரும்பவில்லை” எனக் கூறியுள்ளார். அதன்பிறகு முதலைப் பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 11 அடி 7 இன்ச் நீளம் 600 பவுண்டுகள் எடை கொண்ட ராட்சத முதலை பிடிபட்டது. பின்னர் அது வனவிலங்குகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அத்தகைய ராட்சத முதலை தண்ணீரில் இருந்து வெளியேறி இருந்தால் வேலியை உடைத்து நொறுக்கி இருக்கும் என ஆன்ட்ரூ தெரிவித்துள்ளார்.