இதற்கிடையில், நரியமங்கல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டு யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டு 80 குடும்பங்கள் தங்கி இருந்த பகுதி மண்ணுக்குள் புதைத்தனர். 17 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 12 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதில் பெரும்பாலான குடும்பங்கள் தமிழகத்தை சார்ந்தவை என்பது தமிழக மக்களை நீங்கா துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 55பேர் நிலை குறித்து தெரியவில்லை என்று உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி கயத்தாறு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி இருந்த பகுதியில் தான் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கேரளத்தின் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.