Categories
அரசியல் மாநில செய்திகள்

நாம் சொன்னோம் கேட்கல…. அவுங்க சொல்லுறபடி செயல்படுவோம்…. தமிழக முதல்வர்

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய திருநெல்வேலி சென்ற தமிழக முதல்வர் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளரிடம் பேசினார். அப்போது  இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என்ற நம்முடைய கோரிக்கையை மத்திய அரசாங்கம் நிராகரித்துள்ளார். மத்திய அரசின் வழிகாட்டல் படி அரசு செயல்படும்.

புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஒரு குழு அமைத்து உள்ளோம். அந்த குழு கொடுக்கின்ற அறிக்கையை பொறுத்து அரசு நடவடிக்கை எடுக்கும். என்னென்ன கொண்டுவரலாம் ? எதை நிராகரிக்கலாம் என அந்த குழு பரிந்துரை செய்யும். மத்திய அரசு அறிவித்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை எப்படி கையாள வேண்டும் என்பதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதிலுள்ள சாதக பாதகங்களை அந்த குழு தெரிவிக்கும் அறிக்கையில் அரசு செயல்படுத்தும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |