நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவை பிறப்பிக்கும் போது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்கியது. குறிப்பாக கொரோனா பாதிப்பை பொறுத்து மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சிறு கோயில்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் வரும் பத்தாம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார் மேலும் மாநகராட்சியில் ஆண்டு வருமானம் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள கோயில்கள், மசூதிகள் ,தேவாலயங்கள் திறக்க அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்கள் வரும் 10ஆம் தேதி முதல் திறக்க சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் ஆட்சியரிடமும் அனுமதி பெற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.