தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது.
தங்க விலை சவரனுக்கு 43040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் 288 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் ரூ. 36 குறைந்து 5380க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி 20 காசு குறைந்து 83.40 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் புதிய உச்சத்துக்கு சென்ற தங்கத்தின் விலை 16 நாட்களுக்குப் பிறகு குறைந்துள்ளது. இதே போல தினமும் குறைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.