Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மணல் கொள்ளை மாட்டுவண்டிகள் பறிமுதல்”


சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டி
சேத்துப்பட்டை அடுத்த உள்ள ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு  குப்பம் கிராமத்தை சார்ந்த ராமஜெயம் வயது 38 ஆறுமுகம் 68, சந்தோஷ் 21 ஆகிய மூவரும் மூன்று( 3) மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணலினை கடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த  இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் மூவரையும் மடக்கிப்பிடித்து அதனை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ராமலிங்கம் முதலிய ஐந்து பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

ஆரணி அடுத்த  கூட்ரோட்டில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது.

மனுக்கம்பட்டு ஆற்றில் அனுமதி பெறாமல் மணல் ஏற்றி வந்த 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர்.

Categories

Tech |