சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், SV சேகரை பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. யார் வேண்டுமானாலும் பேசுவாங்க, அதற்கு எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியுமா ? அவர் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கேனு சொன்னா…. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தாலும், நாங்க எல்லாம் வீடு வீடா சென்று ஓட்டு கேட்டோம்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் பாஜக உட்பட சில கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடும் போது அவர் எந்த இடத்துக்கு அவர் பிரச்சாரம் செய்தாருனு தெரியல… உங்களுக்கு ஏதாவது தெரியுமா சொல்லுங்க ?
அவரும் பாஜக கட்சியானு அந்த கட்சி தான் பாத்துக்கணும். அவரு ஒரு கட்சித் தலைவராக கருத வில்லை. அதற்கு பதில் அளிக்க தேவையில்லை. தங்களின் கட்சித் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த கட்சியில் இருக்கின்றவர்கள் எல்லாம் பிரச்சாரம் செய்ய வேண்டும். இவர் எங்கும் பிரசாரம் செய்யவில்லை. நாங்க எல்லாம் அவரை ஒரு பொருட்டாக கருதவில்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.