தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னை கொரோனாவின் கோர பிடியில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதற்கு அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளே காரணம். இதனால் தான் தலைநகர் மீண்டு கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு வருகிறது.
தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப் பட்டு இருந்தது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக இ-பாஸ் நடைமுறையில் இருந்து வருவதால் அதிலிருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கை பல வகைகளில் எழுந்துள்ளது. இது குறித்தான முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி ஆணையர் தற்போது வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், தற்போது வரை மருத்துவம், திருமணம், மற்றும் மரணம் உள்ளிட்ட மூன்று காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இனி வேலைக்கு செல்வோருக்கும், வியாபாரிகளுக்கும் இ-பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பைவிட 35 சதவீதம் கூடுதலாக வழங்க உள்ளோம் என அறிவித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.