ஈரோடு மாவட்டம் கணபதிபுரம் பகுதியில் குப்பை தொட்டி அருகே எரிந்த நிலையில் உடல் கருகி கிடந்த ஆண் சடலத்தை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கணபதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள குப்பை அதிகமானதொட்டி அருகே கருகும் துர்நாற்றம் அதிகமாக வீசியிருக்கிறது. அதன் பின்னர் சாலையில் சென்றவர்கள் அந்த இடத்திற்குச் சென்ற பார்த்தபோது, அங்கு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக கருங்கல்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கருகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன்பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 45 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது.