Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் ?.. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் …. ஐகோர்ட் அதிரடி கருத்து …!!

திருப்பூரில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கக் கோரி வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் ஊழல் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தார்கள்.

இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுங்கள் என கொரோனா காலத்திலும் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் பற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அதே போல நூற்பாலைகளில் மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகள் நலக்குழு மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |