கு.க செல்வம் எம்எல்ஏ தன்னை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நீதிக்கு விரோதமானது என்று பதிலளித்திருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர் செல்வம் டெல்லி சென்று பாஜக தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்தது தமிழக அரசியலில் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுகவில் இருந்து அவர் இடைக்கால நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு, விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அதற்கு பதில் அளித்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம் பாஜகவினரை சந்தித்தது தொடர்பாக திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு பதில் கொடுத்து இருக்கின்றார்.
அதில், தன்னை தற்காலிகமாக நீக்கி வைத்தது இயற்கை நிதிக்கு விரோதமானது என்று கூறியிருக்கிறார். மேலும் திமுகவினர் மற்ற கட்சியினரை சந்திக்க கூடாது என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், அதனால் தன்னுடைய தற்காலிக நீக்கத்தை திரும்பப் பெறுமாறும் அவர் கூறியிருக்கிறார். பாஜகவை சேர்ந்த பிரதமர் நேரில் வந்து கருணாநிதியைச் சந்தித்து அனைவருக்கும் தெரியும் கட்சி மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியானதல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.