நாடு முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்டவற்றை திறப்பதில் தாமதம் ஏற்படும் எனவும் கொரோனா குறைந்த பிறகே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா எதிரொலியால் கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. இதனால் மாணவர்கள் ஆன்லைனில் வகுப்புகளை மேற்கொண்டாலும், அது அவர்களுக்கு பயனுள்ளதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகி வர, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், சுவிட்சர்லாந்தின் விதிகளை பின்பற்ற உள்ளதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.