Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியை பிரிந்து துடித்த கணவன்… விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை…!!

மனைவி பிரிந்த துக்கத்தால் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை ராம்நகரில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனம் (30). இவர் சென்னையில் பணியாற்றிய போது பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகிய நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவருடன் சேர்ந்து வாழாமல் சென்னையில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மனைவி பிரிந்த சோகத்தில் இருந்த சந்தனம் தாணிப்பாறை அருகே தனியார் தோப்பில் உள்ள மாமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்‌. அதன்பின் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |