Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

துரைமுருகனுக்கு அதிமுக அழைப்பு – தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு

திமுகவின் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க செல்வம் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப் பட்ட, நிலையில் பாஜக தலைவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் முடிவதற்குள் திமுகவில்  பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்று பொருளாளர் துரைமுருகன் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதைத்தொடர்ந்து மறுப்பு தெரிவித்து துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துரைமுருகனை அதிமுகவில் இணைய அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் நிச்சயம் நல்ல முடிவு எடுக்கப்படும். அதிமுக ஒரு ஆலமரம், அதிருப்தியில் உள்ள திமுகவினர் யார் வந்தாலும் நிழல் கொடுக்கும். திமுக பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார் என்று தெரிவித்தார்.

Categories

Tech |