தமிழக அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு டிப்ளமோ பட்டயப்படிப்புகளுக்கு வரும் 15ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்ப இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான நேரடி இரண்டாமாண்டு டிப்ளமோ பட்டயப்படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. இணையதளம் வாயிலாக விண்ணப்ப பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் 15ம் தேதி இறுதி நாள் என தெரிவிக்கபட்டுள்ளது. அனைத்து தகவல்கள், கால அட்டவணைகளை மாணவர்கள் www.tndiplomaonline.in (அ ) www.tndiplomaonline.com இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.