ஆன்லைனில் பணம் வைத்து விளையாடிய காவல்துறை அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் இருக்க வலியுறுத்தும் காவல்துறை அதிகாரி ஒருவரே தவறான பாதைக்குச் சென்று தற்போது உயிரிழந்துள்ளார். ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஒருவர் கடன் வாங்கி ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில், ஆரம்பத்தில் நன்றாக ஜெயித்து கொண்டிருந்த அவர்,
இதன் மூலமே நன்கு சம்பாதித்து விடலாம் போல என்று நினைத்து சக காவல் நிலைய அதிகாரிகளிடம் அதிகமாக கடன்களை பெற்று இணையதள சூதாட்டத்தில் போட்டுள்ளார். அத்தனையிலும் தோற்றுப்போக, பெற்ற கடனை திருப்பி அதிகாரிகளுக்கு செலுத்த முடியாமல் மன உளைச்சல் அடைந்து இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், இணையதளத்தில் யாரும் ஜெயிக்க முடியாது பல உயிர்கள் இதன் மூலம் போய் கொண்டிருக்கிறது. மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.