நடிகர் சாந்தனுவை “இனி உனக்கு எல்லாமே நல்லதே நடக்கும்” என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்தியுள்ளார்.
விக்ரம் சுகுமாரன் “மதயானை கூட்டம்” படத்திற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போது “ராவண கோட்டம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். கண்ணன் ரவி தயாரித்து வரும் இப்படத்திற்கு ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இது முதல்கட்ட படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது. பின்பு ‘மாஸ்டர்’,’ வானம் கொட்டட்டும்’ போன்ற மற்ற படங்களில் சாந்தனு பிஸியானார். எனவே ‘ராவண கோட்டம்’ படத்தில் நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகின. இப்படத்தின் கதை தட்பவெட்ப நிலையை பொறுத்தது என்றும், வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
Machii @imKBRshanthnu
all d best🤗#RaavanaKottamTitleLook
செம்ம🔥இதுக்கு அப்பறோம் உனக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்🤗 @VikramSugumara3 brother வாழ்த்துக்கள்😊
Congrats producer #KannanRavi sir @anandhiactress @justin_tunes @editorkishore @gopiprasannaa &whole team#இராவணகோட்டம் pic.twitter.com/wND9ENxzAA— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 7, 2020
கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பிற்கான பணிகள் துவங்கும் என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ‘மாஸ்டர்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “ராவண கோட்டம்” படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார். அதன்படி ராவண கூட்டம் படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ் அத்துடன், ‘இதற்குமேல் அனைத்தும் உனக்கு நல்லதாகவே நடக்கும்’ என சாந்தனுவை லோகேஷ் கனகராஜ் வாழ்த்தியுள்ளார்.”