Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பைக் மீது மோதிய கார்… சம்பவ இடத்திலேயே தாய், மகன் உயிரிழந்த சோகம்..!!

நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டியை சேர்ந்த கோமதி தனது 11 வயது மகன் கீர்த்திக் ரோஷன் உடன் இருசக்கர வாகனத்தில் மோகனூர் நோக்கி சென்றுள்ளார். மற்றொரு இருசக்கர வாகனத்தில் முதியவர் ஒருவர் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வள்ளிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே, சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

இதில் தாய் கோமதி மகன் ரோஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குழந்தை மற்றும் முதியவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லிபாளையம் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Categories

Tech |