Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி… உறவினர்கள் மிரட்டுவதால் காவல் நிலையத்தில் தஞ்சம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவர் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காயத்ரியை, அவரைவிட 17 வயது மூத்தவரான தாய்மாமன் முத்துலிங்கம் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற மொசக்குடிக்கு காயத்ரியை அழைத்துச் சென்ற உறவினர்கள் அவரை கொடுமை செய்துள்ளனர்.

அதன் பின்னர் அங்கிருந்து தப்பித்துச் சென்ற காயத்ரி, திருப்பூரில் அலெக்ஸ் பாண்டியனோடு கடந்த இரண்டாம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.அதனால் மிகுந்த கோபம் அடைந்த முத்துலிங்கம், முருகன் மற்றும் தாய்மாமனின் உறவினர்கள் அனைவரும் அலெக்ஸ் பாண்டியனின் வீட்டிற்குச் சென்று அவர்களை எங்கு பார்த்தாலும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காயத்ரி மற்றும் அலக்ஸ் பாண்டியன் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |