தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024 ல் இருந்து 2,90,907 ஆக அதிகரித்தது. 5,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,481 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,08,124 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.96% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,808 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 65,872 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 30,41,529 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 17 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,481 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை-986
தேனி-452
செங்கல்பட்டு-425
திருவள்ளூர்- 391
காஞ்சிபுரம்- 284
விருதுநகர்-246
தூத்துக்குடி-247
தஞ்சை-227
தென்காசி-203
குமரி-197
கோவை – 183
கடலூர்- 193
வேலூர் -155
திண்டுக்கல்-138
ராணிப்பேட்டை-138
நெல்லை-126
தி.மலை- 121
புதுக்கோட்டை- 114
மதுரை-92
விழுப்புரம்-92
க.குறிச்சி-90
திருச்சி-84
நாகை-77
கிருஷ்ணகிரி- 60
ஈரோடு-58
திருப்பத்தூர்-58
சேலம்-55
சிவகங்கை-55
ராமநாதபுரம்- 55
திருப்பூர்- 45
பெரம்பலூர்-45
அரியலூர்-42
கரூர்-40
நாமக்கல்- 32
திருவாரூர்- 30
தர்மபுரி – 22
நீலகிரி – 19