ஊரடங்கு காலத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்த ஊரடங்கில் பல பொருள்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.
இருப்பினும் அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களாக பல பொருட்கள் தேவைப்பட்ட சமயத்தில், கொரோனா ஊராடங்கில், அதிகம் விற்பனையான பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அன்படி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாபரின் சயவன் பிராஷ் லேகியம், சாப்பிடும் பொருட்களில் மேகி , பார்லே ஜி பிஸ்கெட், அலுவலக வேலைக்காக லேப்டாப் , முக அழகுக்காக ட்ரிம்மிங் பொருட்கள் ஆகியவை அதிக அளவில் விற்பனையாகியுள்ளது.