Categories
தேசிய செய்திகள்

டேபிள் டாப் ஓடுபாதையால் கோழிக்கோடு விமான விபத்து…!!

டேபிள் டாப் எனப்படும் ஆபத்தான ஓடுபாதையில் விமானங்களை இயக்குவது விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று நேற்று தரையிறங்கும் போது நேரிட்ட விபத்தில் விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கோழிக்கோடு மாவட்டத்தின் மேற்கே அரபிக்கடலும் கிழக்கே மலைகளும் அமைந்துள்ளன. கரிப்பூரில்  உள்ள சர்வதேச விமான நிலையத்தின் டேபிள்டாப் ஓடுபாதை அருகில்  வீடுகளும், கட்டிடங்களும் அமைந்துள்ளன. எனவே இந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி விமானங்கள் குறைந்த அளவு இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஓடுபாதை நீளம் விரிவாக்கம் செய்யப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கனமழை காரணமாக விமானத்தை தரை இறக்கிய போது விமானிகளுக்கு ஓடு பாதை சரியாக தெரியாமல் போனதே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் டேபிள்டாப்புடன் கூடிய புதிய விமான நிலையம் உள்ளது. இதேபோன்ற கர்நாடகத்தில் மங்களூரு மிசோராமில் லெங் போய் விமான நிலையங்களும் டேபிள்டாப் ஓடுபாதை உள்ளது. மங்களூரு விமான நிலையத்தில் டேபிள்டாப் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கிய போது 2010 ஆம் ஆண்டில் நேரிட்ட விமான விபத்தில் 158 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |