Categories
உலக செய்திகள்

சுவிஸ் இளைஞரின் கையில் போதைப்பொருள்… கைப்பற்றிய காவல்துறை…!!!

ஜெர்மனியில் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீரியம் குறைந்த கஞ்சா சுவிஸில் சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், அதனை ஜெர்மனியில் பயன்படுத்துவதும் கைவசம் வைத்திருப்பதும்  குற்றச் செயலாகும். லார்ராக்கில் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் ஜெர்மன் போலீசாரால் கைது செய்யப்பட்ட 24 வயது சுவிஸ் இளைஞர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ரைன் நதிக்கரையில் இளைஞர் ஒருவர் கஞ்சா புகைத்ததாகவும், அவரை சோதனை செய்த போது அதிக அளவிலான கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் சனிக்கிழமை கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் வீரியம் மிகவும் குறைந்த கஞ்சா பொருள்களையே தான் பயன்படுத்தியதாக  வாதம் செய்துள்ளார், ஆனால் சுவிஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 மடங்கு குறைவான வீரியம் கொண்ட கஞ்சா பொருள்கள் மட்டுமே ஜெர்மனியில் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால்  24 வயதுடைய அந்த இளைஞர் தற்போது போதைப்பொருட்களை ஜெர்மனிக்கு எடுத்துச் செல்வதாக  கூறி அந்த இளைஞர் மீது குற்றவியல் நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |