மகாராஷ்டிராவில் உள்ள ஒரு உணவகத்தில் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென்று சிலிண்டர் வெடித்தது. இந்தச் சிலிண்டர் விபத்தில் உணவகத்தின் உரிமையாளர் பப்பு குப்தா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து பற்றி காவல் துறை தரப்பில் கூறுகையில்,
“இந்த விபத்தில் காயமடைந்தவர்களைச் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். படுகாயமடைந்த 11 பேரில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது. தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீயை அணைக்க முயன்றுவருகின்றனர்” என்று கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.