Categories
இந்திய சினிமா சினிமா

சிறிய மாற்றங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் – பிரபல நடிகை கருத்து…!


நடிகை பூமி பெட்னேகர் சிறிய மாற்றங்கள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை நாடுமுழுவதும் தீவிரமடைந்துள்ளது. பருவநிலையின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இயல்பான நிலைக்கு தெற்கே இது உள்ளது. அது மேற்கு பகுதியில் இருந்து படிப்படியாக வடக்கு நோக்கி இமய மலையின் அடிவாரத்தை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலம் கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு நமக்கு ஒரு எச்சரிக்கை மணி என பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவர் கூறியதாவது” கடந்த இரண்டு நாட்கள் மும்பையில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பேய் மழை பொழிந்து வருகிறது. அதிலும் சில பகுதிகள்  மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை பற்றிய வீடியோக்களும் கட்டுரைகளும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் நமக்கு எல்லாம் ஒரு எச்சரிக்கை மணி. வேதம் நிறைந்த நகரமயமாக்கல் இதற்கான பதில் இல்லை. தண்ணீர் வெளியேறுவதற்கான வழியில்லாததால் வெள்ளம் ஏற்படும். எங்கு பார்த்தாலும் கான்கிரீட் மையம். பெரும்பாலான நகரங்களில் இதேதான் நிலை. ஒன்று தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது அல்லது வெள்ளம் ஏற்படுகிறது. அதிக காற்று மாசு, ஊட்டச்சத்து குறைபாடு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். வளர்ச்சி முக்கியம்தான் ஆனால் அதுவும் சீராக இருக்கவேண்டும். சிறிய மாற்றங்கள் கூட பெரிய விளைவை ஏற்படுத்தும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |