அடுத்த வருடம் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டி செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த வருடம் இந்தியாவில் டி20 உலக கோப்பை நடைபெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் 2022 ற்கான டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.
இந்தியாவில் 2023 ல் ஒருநாள் உலக கோப்பை நடைபெற உள்ளது. அடுத்த வருடம் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. நவம்பர் 14 அன்று இறுதி போட்டிகள் நடைபெறும். ஆஸ்திரேலியாவில் 2022 அக்டோபர் – நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது. நவம்பர் 13 அன்று இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.