Categories
தேசிய செய்திகள்

மருத்துவரிடம் ஆசைவார்த்தை கூறி… ரூ 4.5 லட்சம் சுருட்டிய இளம்பெண்… போலீஸ் விசாரணை…!!

ஓய்வுபெற்ற மருத்துவரிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி 4 லட்சம் ரூபாயை சுருட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் அன்கூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஜய் பிரதான். இவர் ஓய்வுபெற்ற ஹோமியோபதி மருத்துவர் ஆவார். இவர் தனது தம்பியுடன் வசித்து வருகிறார். பிரதானின் தம்பி காப்பீட்டு முகவராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் அவருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர் பிரதானிடம் 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சுப்ரியா தன்னை ஃபைனான்ஸ் கம்பேனியின் முகவர் என்று கூறி அறிமுகம் ஆகியுள்ளார். பிரதானிடம் நெருங்கி பழக ஆரம்பித்த அந்த இளம்பெண், அவரது வங்கிக் கணக்கு பற்றிய விவரத்தை அறிந்துகொண்டு, பிரதானின் காப்பீட்டுத் தொகையைக் காப்பீடு காலம் முடியும் முன்னரே எடுத்துதருவதாகக் கூறி வங்கிக் கணக்கு விவரம், தொலைபேசி எண் போன்ற விவரங்களையும் வாங்கியுள்ளார்.

மருத்துவரும் ஏமாந்து போய் அனைத்து விவரங்களையும், அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார். அதன்பின் அவருக்கு தெரியாமலேயே அந்த இளம்பெண் பல தவணைகளாக சுமார் 4.5 லட்சம் ரூபாயை சுரண்டியுள்ளார். சில நாட்களில் தான் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்துகொண்ட மருத்துவர் அன்கூல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்தப் பெண் தொடர்ந்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருபவர் எனவும், ஏற்கனவே, நிர்மல் பேஹ்ரா என்பவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் சுருட்டி உள்ளார் எனவும் தெரியவந்தது. தல்சேர் பகுதியில் தலைமறைவாக இருந்த அப்பெண்ணை காவல் துறையினர் தற்போது கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |