தமிழக்தில் பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்கள் இன்று உற்சாகமாக இருக்கின்றனர்.
அதே போல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.