அமேசான் நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது .
நேற்று முன்தினம் தான் அமேசான் பிரைம் டீல் என்ற ஆஃபரை தனது வாடிக்கையாளர்களுக்கு உலகம் முழுவதும் வழங்கியது. இதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியது அமேசான் நிறுவனம். இந்நிலையில் மீண்டும் இந்தியர்களுக்காக சிறப்புச் சலுகை ஒன்றை அமேசான் வழங்கியுள்ளது. அதன்படி,
அமேசான் நிறுவனம் இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை நான்கு நாட்கள் ஃப்ரீடம் சேல் என்ற சிறப்புத் தள்ளுபடிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த தள்ளுபடி நாட்களில் வீட்டு உபயோகப் பொருள்கள், மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு 70 சதவிகிதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். 10 சதவிகிதம் வரை சிறப்புச் சலுகையும் உண்டு என்று அறிவித்துள்ளது. சுதந்திர தினம் வருவதால் அதை ஒட்டியே அமேசான் நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளதாக தகவல் வைரலாக பரவி வருகின்றன.