Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழை” 74 வீடுகள் சேதம்….. 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தவிப்பு….!!

நீலகிரியில் தொடர் கனமழையால் வீடுகளை இழந்து ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தவித்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக  மலை மாவட்டமான நீலகிரியில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையால் வெள்ள பாதிப்பு சூறைக்காற்று நிலச்சரிவு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். மேற்கண்ட பிரச்சினைகளால், 74 வீடுகள் சேதமடைந்து  நீலகிரி பகுதியில் வசித்துவரும் மக்களில் ஆயரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்,

கூடலூர், பந்தலூர், குந்தா  ஆகிய மூன்று தாலுகாக்களில் தலா நான்கு நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் மேற்கண்ட தாலுகாக்களில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட நபர்கள்  தங்க வைக்கப்படுகிறார்கள். தற்போது இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து தருவதிலும், கொரோனா  பாதிப்பு இருக்கும் சூழ்நிலையில் அதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் ஒருசேர மேற்கொண்டு வருகிறது. 

Categories

Tech |