கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ரஷ்யா தொடர்ந்து முன்னணி வகிக்கிறது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் சூழ்நிலையில், இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே இருக்கிறது.
இது ஒருபுறமிக்க இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியிலும், உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 12ம் தேதி பதிவு செய்ய இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியை தொடங்கிய ரஷ்ய விஞ்ஞானிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளை விறுவிறுவென முடித்துள்ளனர். இதையடுத்து தடுப்பு மருந்து உற்பத்தி அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.