இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தற்போது ஓய்வு அவசியம் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் திணறுகிறது. பெங்களூரு அணி இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளிலும் தோற்றுள்ளதால் பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பினை ஏறக்குறைய இழந்து விட்டது என்றே கூறலாம்.
இந்த நிலையில், உலகக்கோப்பைத் நெருங்கி வரும் வேளையில் உலக கோப்பை தொடரைக் கருத்தில் கொண்டு, இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமென மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடர் என்பது ஒரு மிகப்பெரிய அளவில் நடைபெறும் போட்டியாகும்.எனவே அந்த தொடருக்காக முன்னதாகவே விராட் கோலிக்கு ஓய்வு அளிப்பது புத்திசாலித்தனமானது என மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
If India are smart they rest @imVkohli now for the World Cup … Give him some time off before the big event … #IPL2019
— Michael Vaughan (@MichaelVaughan) April 7, 2019