உலகளவில் கொரோனா பாதிப்பால் 729,579 பேர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிகின்றனர். ஏறக்குறைய ஆறு மாதங்களாக கொரோனா என்ற ஒற்றை வைரசை எதிர்த்து உலக நாடுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றது. உலக அளவில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்கா கொரோனாவால் நிறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் டிரம்ப் அரசு திணறி வருகிறது என்று பலராலும் பலரையும் விமர்சிக்க வைத்தது.
150க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க போராடி வருவதிலும் நம்பிக்கைக்குரிய பல ஆய்வு முடிவுகள் கிடைத்துக் கொண்டிருப்பது உலக நாடுகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றது. கொரோனாவுக்கு எதிரான முழுமையான தடுப்பு மருந்து எப்போது அனைவருக்கும் கிடைக்கும் ? கொடிய கொரோனவை எப்போது ஒழித்துக் கட்டுவோம் என்ற பெருத்த எதிர்பார்ப்பில் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உலகளவில் 19,794,266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது, 728,788 பேர் உயிரிழந்துள்ளனர். 12,713,871 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 6,351,607 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதில் 65,144 பேர் இக்கட்டான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக இந்தியாவில் 2,152,020 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 43,453 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக அமெரிக்காவில் 5,149,723 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு 165,070 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில் 3,013,369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 100,543 பேர் உயிரிழந்துள்ளனர்.