Categories
உலக செய்திகள்

“தங்கள் நாடு தப்பித்தால் போதும் என நினைப்பது சுயநலம்”- உலக சுகாதார அமைப்பின் தலைவர்

உலக நாடுகள் கொரோனா பிடியிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த ஒரு மருந்தும் கண்டுபிடிக்கப்பதாத நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இது பற்றி ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள தலைமையகத்தில், காணொலி காட்சி மூலம் அதன் தலைவா் டெட்ரோஸ் அதனோம் கூறுகையில்,”கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தைக் காட்டுவது மிகவும் தவறான செயலாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது.

கொரோனா நோய்த்தொற்றின் கோர பிடியிலிருந்து உலகம் விரைவாக மீண்டு வர வேண்டும் என்றால், அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். ஏனென்றால், இது உலகமய காலக்கட்டம். தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. இத்தகைய சூழலில், உலகின் மற்ற நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கள் நாடுகளுக்கு மட்டும் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைத்தால் போதும் என்று நினைப்பது மிகவும் தவறு” என்று அவா் கூறியுள்ளார்.

Categories

Tech |