Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“எல்லாரும் ஓட்டு போடுங்க” நினைவு படுத்தும்GOOGLE……!!

இன்று வாக்குப்பதிவை நினைவு கூர்ந்து அனைவரும் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் GOOGLE தனது வலைத்தளத்தை மாற்றியமைத்துள்ளது.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வாக்களிப்பது நமது கடமை என்று  ஏற்கனவே இந்தியா முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி100 % வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இன்று GOOGLE தனது இணைத்தை வாக்களிப்பது நமது கடமை என்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு விரலில் வாக்கு பதிவு செய்து விட்டேன் என்று மை இருப்பதை போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Categories

Tech |