Categories
மாநில செய்திகள்

அ.ம.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் …!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டங்களில் சட்டமன்ற தேர்தல் காலப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கடலூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் நகர கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்றது. கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு அக்ரிபி  முருகேசன் கழக அமைப்புச் செயலாளரும் மாவட்ட கழக பொறுப்பாளருமான, திரு கேஎஸ்கே பால முருகன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், முசிறியில் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட கழக செயலாளர், திரு எம் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தலில் கழகம் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மாநகர அமமுக மேற்கு கழக கிளை அலுவலகத்தை, கிழக்கு மாவட்ட செயலாளர் திரு பி. செந்தில் முருகன்திறந்து வைத்தார்.

அப்போது மாற்று காட்சிகளை சேர்ந்த பலர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் திருமதி அம்மு ஆண்ட்ரோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆழ்வார் தோப்பில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளர் திரு புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஊராட்சி மற்றும் ஊராட்சி செயலாளர்கள், பேரூராட்சி வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை நகர கழக சார்பில் மாற்று கட்சியினர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி, மாவட்ட கழக செயலாளர் எஸ் செந்தமிழன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

Categories

Tech |