உணவகங்களில் சாப்பிடும் பொழுது முகக்கவசம் அணிந்தவாறு சாப்பிடும் வகையில் ஜப்பானியர்கள் புதிய முக கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா காலகட்டத்தில் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது என்பது கட்டாயமான ஒன்றாக உள்ளது. முக கவசம் அணிவதால் மக்கள் சில சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவோர் முகக்கவசத்தைக் கழற்றி விட்டு சாப்பிடவேண்டிய நிலைமை உள்ளது.
இதனை தவிர்க்கும் நோக்கத்தில், வாய் மற்றும் மூக்கை மறைத்தவாறு சாப்பிடும் வசதி கொண்ட முகக்கவசத்தை ஜப்பானிய உணவகம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாகவும், பாதுகாப்பான முறையிலும் நாம் சாப்பிட முடியும் என்கின்றனர் இதனை வடிவமைத்த ஜப்பானியர்கள். முகக்கவசம் அணிந்தவாறே உணவகங்களில் சாப்பிட முடிவதால் மக்களிடையே இது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.