Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை விவசாயி மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி..!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேயிலை விவசாயின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, படுக சமுதாயத்தின் முதல் பெண் ஐஏஎஸ் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குள கிராமத்தைச் சேர்ந்த சுந்தரன் சித்ரா தேவி தம்பதியின் ஒரே மகள் மல்லிகா. சிறுவயது முதலே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த மல்லிகா, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். மூன்று முறை முயற்சி செய்து தோல்வி அடைந்த அவர், நான்காவது முறை இந்திய அளவில் 621 இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் படுக சமுதாயத்தின் முதல் பெண் ஐஏஎஸ் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Categories

Tech |