Categories
உலக செய்திகள்

14 வயது சிறுமியை சந்திக்க சென்ற நபர்… அங்கு அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அமெரிக்காவில் 14 வயது சிறுமி என்று நினைத்து ஆன்லைன் மூலம் அவரிடம் தவறாக பேசி நேரில் பார்க்க சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

ஹாரிஸ் கவுண்டியில் ஆன்லைன் மூலம் சிறுமியிடம் தவறாக பேசிய நபர்களை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஆலன் ரோஷன் கூறும் பொழுது, “Eduardo De La Cruz Gomez என்று நபர் சமூக வலைதளம் மூலம் பல பெண்களிடம் தவறாக பேசி வந்துள்ளார். இதனை அடுத்து 14 வயது சிறுமி போல அதிகாரி ஒருவர் அந்த நபரிடம் பேசியுள்ளார். அப்போது, Eduardo அந்த அதிகாரியிடம், சிறுமியிடம் பேசுவதாக நினைத்து, தவறாக நடந்து கொள்ளும் எண்ணத்தில் அவரை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்பின் இருவரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் சொன்ன இடத்திற்கு அவரை வரவைத்து கைது செய்தோம். சிறுமி வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் வன்கொடுமை குற்றவாளிகள் பதிவேட்டில் அவரை கையெழுத்திட உத்தரவிட்டோம்.

இந்த கொரோனா காலகட்டத்திலும் சிறுமிகளை குறிவைத்து தாக்கும் இது போன்ற நபர்களை தொடர்ந்து கண்டறிந்து  சட்டத்திற்கு முன்பு நிறுத்துவோம். இதேபோல் தோமஸ் டேவிட் என்பவரும் சிறுமியிடம் பேசுவதாக நினைத்துக்கொண்டு சமூக வலைதளம் மூலம் எங்கள் அதிகாரியிடம் பேசி உள்ளார். அவரையும் இதேபோல் நைசாக பேசி வரவைத்து சென்ற 4ஆம் தேதி கைது செய்தோம். ஏற்கனவே அவர் மீது போடப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் எந்த ஒரு தொடர்பும் இல்லை இரண்டுமே தனித்தனி இடத்தில் நடந்தது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |