கேரள விமான விபத்தில் இரண்டு வயது மகள் உயிரிழந்ததை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து வரும் கணவரின் சோகக்கதை.
நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த பயணிகள் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 18 முதல் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், விமான விபத்தில் Murtaza Faisa(31) என்ற நபர் தன்னுடைய இரண்டு வயது மகளை இழந்துள்ளார். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டீம் லீடராக பணியாற்றி வருகிறார். இவருக்கு Sumayya Thasneem(27) என்ற மனைவியும், Aysha Due என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். சென்ற மார்ச் மாதம் ஒன்றாம் தேதி அன்று சுற்றுலா விசா மூலமாக Murtaza Faisa-வின் மனைவியும் அவரது குழந்தையும் துபாய் சென்றுள்ளனர். அதன் பின்னர் கொரோனா அச்சத்தில், இருவரும் ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு திரும்ப முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்திய அரசின் வந்தே பாரத் மிஷின் திட்டத்தின்படி ஏழாம் தேதியன்று கேரளா திரும்புவதற்கு மகள் மற்றும் மனைவிக்கு விமான பதிவு செய்திருந்தார். அதன்பின் அடுத்த மூன்று மணி நேரத்தில் வரும் விமானத்தில் அவருக்கு பதிவு செய்திருந்தார். ஆனால், அதற்குள் ஏற்பட்ட விமான விபத்தில், அவரின் மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். மனைவியுடன் வந்த மகள் Aysha Due உயிரிழந்துவிட்டார். மனைவியின் உடல்நிலையைக் கருதி மகள் உயிரிழந்ததை பற்றி அவர் மனைவியிடம் கூறவில்லை. அவர் பூரண குணமடைந்து திரும்பிய பின்னர் சொல்லிக்கொள்ளலாம் என்று Murtaza Faisal முடிவெடுத்துள்ளார்.