ராமநாதபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சமூக விலகலை பின்பற்றாமல் ஏராளமானோர் குவிந்து மீன் பிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கொழுந்துறை கிராமத்தில் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய், குளங்கள், ஊரணிகள், பண்ணைக்குட்டைகள் ஆகியவைகளில் நீர் நிரம்பி வழிந்தனர். கண்மாய் மற்றும் குளங்களில் அதிக அளவிலான மீன்கள் வரத்து இருந்ததால், கிராம மக்கள் அவற்றை பாதுகாத்து வந்தனர். தற்போது தண்ணீர் குறைந்து விட்டதால், மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. அதற்கு வந்திருந்த மக்கள் சமூக இடைவெளியை மறந்து மீன் பிடிப்பதில் கவனம் செலுத்தினர். அவர்கள் கையில் கெண்டை, குறவை, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.